பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்!

0

பிரான்சில் கொரோனாவின் 3வது அலை குறித்த அச்சம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என நாட்டின் பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் AstraZeneca தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

AstraZeneca தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபிக்க தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக பிரதமர் Jean Castex கூறியுள்ளார்.

புதிய நடடிக்கையின் படி, அத்தியாவசிமற்ற வணிகங்கள் மூடப்படும் ஆனால் பள்ளிகள் திறந்திருக்கும்.

மக்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ-க்குள் தான் வெளிபுற உடற்பயிற்சி செய்ய அனுமதி, மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பயணிக்க அனுமதியில்லை, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கான காரணத்தை விரிவாக படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

பிரான்சின் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும். இருப்பினும், இது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதாவது 19:00 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here