பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானர்

0

இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அன்புடன் அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் தனது 92 வயதில் இன்று காலமானார்.

தனது 13வது வயதில் இசைத்துறையில் அடியெடுத்து வைத்த அவர் 1942 இல் தனது முதல் சினிமா பாடலைப் பதிவு செய்தார்.

ஏழு தசாப்தங்கள் நீடித்த அவரது இசை வாழ்க்கையில், பல்வேறு மொழிகளில் 30,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here