பிரபல பாடகி கல்யாணி மேனன் காலமானார்

0

தமிழ் மற்றும் மலையாளத்தில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் கல்யாணி மேனன். தமிழில் இளையராஜா இசையில் 1979-ம் ஆண்டு வெளியான ‘நல்லதொரு குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘செவ்வானமே பொன்மேகமே’ பாடல் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு மறக்கமுடியாத பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த கல்யாணி மேனன். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 80. பாடகி கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன், கருணாகரன் மேனன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ராஜீவ் மேனன், தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். பாடகி கல்யாணி மேனனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here