பிரபல பாடகர் கொரோனாவுக்கு பலி

0

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பாடகர் கோமகன் கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலில் சினேகாவுடன் ஒரு சில வரிகளை பாடியவர் மாற்றுத்திறனாளி கோமகன். இவர் இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய புகழை பெற்றார் என்பதும் அதன் பின்னர் விஜய் நடித்த சுறா உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஓரிரு படங்களில் இசை அமைக்கவும் செய்துள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் கோமகன் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here