பிரபல நடிகை போல மாற முயற்சித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி… தெரிய வந்த உண்மை

0

ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், கடந்த 2017 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் தோற்றம் மாற வேண்டும் என பலமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மேலும் 50 முறை அறுவை சிகிச்சை செய்ததால் ஜோம்பி போல தனது உருவம் மாறியதாக அவர் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனால் ஜோம்பி ஏஞ்சலினா ஜோலி என்று அழைக்கப்பட்டார்.

அவர் மிகவும் பிரபலமானார்.

ஆனால் 2019ஆம் ஆண்டு தபார் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது தவறான வழிகாட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டினால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரானில் மாஷா அமினி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் தபார் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தோன்றிய தபார், சாதாரண பெண்ணைப் போல் தோற்றமளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தான் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ஒப்பனை மற்றும் கணினி மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் என அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

மேலும் புகழ்பெறவே இந்த வழியை கையாண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here