பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கும் யோகிபாபு

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் யோகிபாபு விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளாராம். நடிகர் விஷாலும், யோகி பாபுவும் ஏற்கனவே பட்டத்து யானை, அயோக்யா, ஆக்‌ஷன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here