பிரபல நடிகரின் படத்தில் இணையும் ஆரி!

0

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த படத்தில்தான் ஒரு முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஆரி என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதியுடன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here