பிரபல இயக்குனர் மரணம்… சோகத்தில் ரசிகர்கள்…!

0

ஷாம் நடித்த இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக எஸ்.பி.ஜனநாதன் அறிமுகமானவர்.

அப்படத்திற்காக அவர் அந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றார்.

அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தது.

மேலும் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி. ஜனநாதன் தீடீர் உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.சி.யு வார்டில் அனுமதிக்கப்பட்டு, பின் அவர் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மூளைச் சாவடைந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் தற்போது இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here