அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
அது உன் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் அவர் உயிருடன் நாடு திரும்ப மாட்டார் என ஆஷ்டன் அகரின் மனைவிக்கு சமூக வலைதள பதிவு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கொடுத்த விளக்கத்தில்,
இது மாதிரியான சமூக வலைதள பதிவுகளை ஒரு அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.
அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் இரு நாட்டு அரசு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.