பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு குறும்படம் உருவாக்கிய வரலட்சுமி

0

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.

தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்த அவர், தற்போது திரைப்பிரபலங்களுடன் இணைந்து முகக்கவசம் முறையாக எப்படி அணிய வேண்டும், எப்படியெல்லாம் அணியக்கூடாது என்பதை சித்தரித்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இந்த குறும்படத்தில் நடிகர்கள் கிருஷ்ணா, சதீஷ், யோகிபாபு, சந்தீப் கிஷன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, வித்யூலேகா, வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.https://twitter.com/varusarath5/status/1401764574697721860

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here