கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக முன்பாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, அவ்வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.