பிரதமர் தொடர்பில் வெளிவரும் புகைப்படங்கள் – ஊடக பிரிவு விளக்கம்

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் தொடர்ந்தும் போலி செய்திகள் பரவிக் கொண்டிருப்பதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி உண்மையில்லை என ஏற்கனவே யோஷித ராஜபக்ஷவினால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரதமர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக வெளியாகிய தகவல்கள் அனைத்து போலியானதெக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் தனது கடமைகளை வழைமை போன்று மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஊடக பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் பிரதமர் சிகிச்சை பெறுவதனை போன்று தெளிவற்ற புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

எனினும் அவ்வாறு வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here