பிரச்சனை இழுத்த லைகாவுக்கே படம் பண்ணும் வடிவேலு… செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்!

0

நடிகர் வடிவேலு லைகா நிறுவனத்தோடு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரெட் விதிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.

வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது.

இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது வடிவேலுவின் திரை வாழ்க்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் சுராஜ் ஒரு படத்தை உருவாக்க உள்ளார். அந்த கதாபாத்திரத்திலும் வடிவேலுவே நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இம்சை அரசன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டுவதற்காக வடிவேலு இந்த படத்தை லைகா தயாரிப்பில் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார். இனிமேல் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் வடிவேலு நடிப்பார் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here