பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியல் வெளியீடு…! நடராஜனின் பெயர் இடம்பெறுமா…?

0

சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதில் ஏ+ கிரேடில் இடம்பிடிக்க வேண்டுமானல் மூன்று வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் விளையாட வேண்டும்.

அதன்படி ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகார் தவன், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பி கிரேடில் சாஹா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சர்துல் தாகூர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சி கிரேடில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஷர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளர்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 வடிவிலான போட்டிகளிலும் அறிமுகமாகி ஜொலித்த தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை.

இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.

அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.

அதுவும் இல்லை என்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.

நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.

இதனால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here