தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்றனர். விரைவில் 5-வது சீசன் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் கசிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.