பிக்பாஸ் ஷிவானிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு:

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பல நடிகர் நடிகைகள் தற்போது திரையுலகில் வாய்ப்பு பெற்று பிஸியாக இருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஷிவானிக்கும் தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது

ஷிவானி ஒரு தனி பாடலில் நடிக்க உள்ளார் என்பதும் அவருடன் நடிகர் பூரணேஷ் என்பவர் நடனமாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’போதையில் தள்ளாதே’ என்ற டைட்டில் கொண்ட இந்த பாடலை அருண்ராஜ் என்பவர் கம்போஸ் செய்ய உள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’தடம்’ திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் இயக்குனர் சதீஷ் கூறியபோது ’சமீபத்தில் சூப்பர் ஹிட்டான ’எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடல் போன்று இந்த பாடல் இருக்கும் என்றும் இந்தப் பாடல் கௌதம் மேனன் ஸ்டைலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஷிவானி நாராயணன், பூரணேஷ் இந்த பாடலில் நடிக்க உள்ளார்கள் என்பதும் ஷிவானி நாராயணனின் பிரபலம் இந்த பாடலை பிரபலப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்

இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பாடலை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் இந்த பாடல் ரொமான்ஸ் மற்றும் எமோஷன் கலந்த டான்ஸ் மூவ்மெண்ட் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த பாடலில் ஒரு சிறிய கதையையும் சொல்ல இருப்பதாகவும் இந்த பாடல் நிச்சயம் அனைவரையும் கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here