பிக்பாஸ் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

0

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா இந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே ரசிகர் கூட்டம் அதிகம் என்பதால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு தவறாமல் வாக்கு அளித்து வருவதால் அவர் இது வரை தாக்குபிடித்து நூறு நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் திடீரென பிரியங்காவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உடல் நலக்குறைவால் இருந்ததை நேற்று எபிசோட் பார்த்தவர்கள் பார்த்திருப்பார்கள்

இந்தநிலையில் நேற்று எபிசோட் முடியும்போது பிரியங்கா மீண்டும் திரும்பி வந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளது. தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாகவும் மருத்துவமனையிலேயே தூங்கும்படி கூறியதாகவும் ஆனால் நான்தான் பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறேன் என்று மறுத்து விட்டதாகவும் பிரியங்கா கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு சரியாகி விட்டது என்பது தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here