பிக்பாஸில் யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து!?

0

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க இருக்கிறது. இதற்கான முதல் புரமோ சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதற்குமுன்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.

இந்த பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், டிக்டாக் ஜி.பி.முத்து, பிக்பாஸ் வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஜி.பி.முத்து தான் முதல் போட்டியாளர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here