பிக்குவை போல் மாறு வேடத்தில் சந்தேக நபர்! பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை

0

இலங்கையில் மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரை ஒன்றுக்கு தன்னை பிக்கு என அடையாளப்படுத்தி நபரொருவர் வருகைத்தந்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் கொண்ட விகாரதிபதி அவரிடம் விபரங்களை கேட்டு அறிய முயற்சித்த போது குறித்த நபர் அப்பகுதியில் காணப்பட்ட வனப்பகுதிக்கு தப்பி ஓடியுள்ளார்.

அதனையடுத்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு மாறு வேடத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்நிலையில் சந்கே நபரை அடையாளம் கண்டால் 071-8591287 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here