பால் குடிக்க மறுத்த பச்சிளங்குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்த தாய்….

0

இந்தியாவில் திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி பாலமுருகன் – சாந்தி.

இவர்களுக்கு ஒன்றரை வயதில், ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த அக்டோபர் மாதம், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவம் முடிந்த நிலையில் சாந்தி முத்தையநல்லூரில் உள்ள தன் தாய் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, குழந்தை சரிவர தாய்ப்பால் குடிக்காத காரணத்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லாமல், அதை சரி செய்வதற்காக, குழந்தைக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்துள்ளனர்.

அதன் காரணமாக குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் திருச்சி பெரிய வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 30-ஆம் திகதி குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவ்வாறு உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன்காரணமாக நோயாளிகள் உயிர் இழந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும்.

மேலும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here