பாலிவுட் நடிகர் அமீர்கான் விவகாரத்து: காரணம் இதுதான்!

0

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது. எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம். சில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம்.

திரைப்படங்கள் மற்றும் பிற விஷயங்களில் இருவரும் ஒத்துழைத்து தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். எங்கள் உறவில் இது ஒரு பரிணாம வளர்ச்சி. இந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் புரிந்து கொண்டதற்கும் நன்றி. அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முடிவை நாங்கள் அவ்வளவு எடுத்திருக்க மாட்டோம். எங்கள் நலம் விரும்பிகளூக்கு நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவெனில் எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்களும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரணை திருமணம் செய்தார் என்பதும் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here