பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் கனடா…!

0

கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமூலம் மேல்சபையான செனட் சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும்.

மேலும் இந்த சட்டமூலம், மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் யாரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

இந்த சட்டமூலத்தை ஆளும் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் ஆதரித்துள்ளனர்.

இதற்காக கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை குலுக்கியதும், கட்டித்தழுவியதும் அங்கு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சட்டலும் மீது தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்கு அளிக்க எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் எரின் ஓ டூல் அனுமதி அளித்திருந்தார்.

ஆனாலும், உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு அளித்தது ஆச்சரியம் அளித்தது என்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீமஸ் ஓ ரீகன் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here