பாரிஸ் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட அலறல் சத்தம்…! பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

உடற்பகுதிகள் அனைத்தும் எரியுண்ட நிலையில் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்ட அவர்,ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ஐந்து பேரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

அந்த நபர் பயணிகள் மேடையின் தரையில் எரிந்து புரண்டுகொண்டு கிடந்த வேளை ரயில் ஒன்று அங்கு வந்து தரித்தது.

அதில் வந்த பயணிகள் தீயில் ஒருவர் எரியும் காட்சியை அருகே நேரில் கண்டு அலறத் தொடங்கியதனால் அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட நேர்ந்ததுடன் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஷவர்களுக்கு உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த நபர் உடல் முழுவதும் பெற்றோல் ஊற்றி நனைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்து அங்கு வைத்து அவர் தனக்குத் தீ மூட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத்தெரியவரவில்லை.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here