பாரிஸ் புறநகர் பகுதியான Aubervilliersஇல், நேற்று காலை 5.30 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த வெடிவிபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியைச் சுற்றியுள்ள பல தெருக்கள் அவசர உதவி வாகனங்கள் செல்வதற்கு வசதியாக மூடப்பட்டுள்ளன.
நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், கட்டிடத்தின் மேல் தளம் பாதியளவுக்கு சேதமடைந்துவிட்டது.
அந்த குடியிருப்பிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவசர உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.