பாரிஸ் உணவகங்கள், அருந்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு!

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உணவகங்கள் மற்றும் அருந்தகங்களின் சலுகைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு வருடமும் உணவகங்கள் மற்றும் அருந்தகங்களுக்கு வழங்கப்படும் கோடைகால சலுகைகள் இந்த வருடம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கோடை காலங்களின் போது உணவகத்தினர் தங்கள் உணவங்க முற்றத்திலும், மாடிகளிலும் தற்காலிக இருக்கைகளை அமைத்து மொட்டை மாடிகளில் வாடிக்கையாளர்களை கவர்வது வழக்கமாகும்.

அந்தவகையில் வருடம் தோறும் பாரிசில் 12,000 வரையான உணவங்கள், அருந்தகங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இம்முறை 4,000 உணவகங்கள் மற்றும் அருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் 12,000 அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது.

இம்முறை நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அனுமதி குறைத்தமை தொடர்பில் உணவக உரிமையாளர்கள் நகரசபையிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here