பாரிஸில் ரயில் நிலையத்தில் பரபரப்பு !

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்க முயன்ற நபரை பாதுகாப்புப் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் உள்ள மிக பரபரப்பான Saint-Lazare ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

ரயில் நிலையத்திற்குள் முகக் கவசம் அணியாமல் வந்த நபரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர், பின் அவர் அதிகாரிகளுக்கு இணங்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து, திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்.

பின், ‘அல்லா ஹு அக்பர்’, பிரான்ஸ் இஸ்லாமிய அரசால் ஆளப்படுகிறது என ரயில் நிலையத்தில் கத்தியுள்ளார்.

உடனே அதிகாரிகள் துப்பாக்கியை எடுத்து நபரின் மார்பில் சுட்டு சாய்த்துள்ளனர்.

காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here