பாரிஸில் பொலிஸாரை தாக்க வந்த மர்ம நபர் சுட்டுக்கொலை…

0

பாரிஸ் நகரில் பட்டப்பகலில் பொலிஸ் ஒருவரை கத்தியால் தாக்க முயன்ற மர்ம நபரை பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிசூட்டிற்கு இரையாக்கியுள்ளனர்.

சக காவல்துறை அதிகாரிகள் ஒரு குடும்ப வன்முறையை விசாரிக்க ஒரு வீட்டிற்குள் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரிஸின் 18 வது மாவட்டத்தில் உள்ள ரூ போயினோடில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த மர்ம நபர் கத்தியை காட்டி பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியதாகவும், இதனையடுத்து தற்காப்புக்காக அந்த அதிகாரி அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அந்த நபரை அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தவே பொலிஸ் அதிகாரி முயன்றுள்ளார்.

ஆனால் மீண்டும் அந்த நபர் திரும்பி வந்து கத்தியால் பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பவ இடத்திலேயே அந்த மர்ம நபர் இறந்த நிலையில் அந்த அதிகாரி அதிர்ச்சியில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு ஏதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here