பாரிஸில் இயங்கும் புதிய ரயில் சேவை!

0

பாரிஸில் 14 ஆம் இலக்க மெற்றோ சேவை போன்று, நான்காம் இலக்க மெற்றோவும் சாரதி இல்லாமல் தானியங்கி முறையில் பயணிக்க உள்ளது.

12 ஆம் திகதி முதல் இந்த சாரதியற்ற தானியங்கி முறையிலான தொடருந்து இயக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நான்கு தொடருந்துகள் மட்டுமே நாள் ஒன்றில் இயக்கப்படும்.

2023 ஆம் ஆண்டுக்குள் 4 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் அனைத்தும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் இலக்க மெற்றோவில் நாள் ஒன்றுக்கு 52 சேவைகள் இயக்கப்படுகிறன.

இவற்றில் நான்கு தொடருந்துகள் கடந்த ஜூன் மாதம் முதல் பரீட்சாத்தமாக தானியங்கி முறையில் இயக்க பரிசோதிக்கப்பட்டு வந்தது.

அதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நான்கு தொடருந்துகள் தானியங்கி முறையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் மெட்ரோ ரயில் பாதையில் உருவாகி வரும் இந்த ஓட்டுநர் இல்லாப் பயண முறை ஏனைய ரயில் பாதைகளிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள ரயில்கள் தற்போது இயங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

நான்காம் இலக்கம் என்பது இல் து பிரான்ஸ் வலையமைப்பின், மெட்ரோ மற்றும் ஏர்.ஊ.ஏர் (RER) இணைந்த மூன்றாவது பரபரப்பான ரயில் பாதையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here