பாரிஸில் அமுலுக்கு வரும் தடை… மீறுபவர்ளுக்கு எச்சரிக்கை விடுக்கும் காவல்துறை

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் Freedom Convoy போராட்டத்திற்கு தடை விதிப்பதாக நகர காவல்துறை அறிவித்துள்ளது.

பிரான்ஸிலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸில் ஒன்றிணைந்த Freedom Convoy என்று அழைக்கப்படும் போராட்டகாரர்கள் புதன்கிழமை தெற்கு பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் முழுவதும் பல நகரங்களில் இருந்து போராட்டகாரர்கள் புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெப்ரவரி 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை, பொது அமைதியின்மை அபாயத்தை காரணம் காட்டி, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாரிஸுக்குள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது.

இந்த உத்தரவை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 4,500 யூரோ அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here