பாரியளவு வீழ்ச்சியடைந்த கனேடிய டொலர்

0

கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் பெறுமதி ஒரு சந்தர்ப்பத்தில் 75.15 அமெரிக்க சதங்களாக காணப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் பதிவான மிக குறைந்த தொகை இதுவாகும்.

கனடாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி வீதங்களை மத்திய வங்கி உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய பெறுமதியின் பிரகாரம் 1.33 கனேடிய டொலர்களாக காணப்படுகின்றது.

கனேடிய டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here