பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் அரிய வகை ஆந்தைகள் கண்டுபிடிப்பு (PHOTOS)

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமின் வீட்டு கூரையிலிருந்து, மிக அரிய வகையான மூன்று ஆந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஆந்தைகளை புத்தளம் வனவிலங்கு அதிகாரிகள் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

வீட்டு கூரையிலிருந்து கீழே வீழ்ந்த நிலையில், குறித்த ஆந்தைகளை வனவிலங்கு அதிகாரிகள் தமது அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Barn Owl என்ற விஞ்ஞான பெயரில் இந்த ஆந்தைகள் அழைக்கப்படுகின்றன.

இந்த வகையான ஆந்தைகளை இலங்கையில் இலகுவாக அவதானிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆந்கைளை மேலதிக ஆய்வுகளுக்காக நிக்கவரெட்டிய மிருவ வைத்திய அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here