பாராளுமன்றம் செல்லும் யோஹானி

0

உலகப்புகழ் பெற்ற இளம் பாடகி யொஹாணி டி சில்வாவுக்கு பாராளுமன்ற வளாகத்தில் பாராட்டு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பூரண சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த பாராட்டு நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசேட வரவேற்பு உரையை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நிகழ்த்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here