விஜய் டிவியில் தற்போது மிகவும் வைரலாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் தந்தையாக நடித்து வந்தவர் புகழ்பெற்ற நடிகர் வெங்கடேசன். தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வெங்கடேசன் தற்போது மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சோகம் நீங்கும் முன்பே மீண்டும் ஒரு நடிகர் மரணம் அடைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.