பாபா வாங்கேவின் கணிப்பு… மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அச்சம்…?

0

பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 2022 ஆம் ஆண்டில் போர் உருவாகும் என கணித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாஸ்ட்ரடாமஸ் மற்றும் கண் பார்வையற்றவரான வங்கா பாபா 2022ஐக் குறித்து பயங்கரமான விடயங்களை கணித்துள்ளனர்.

அவ்வகையில், 2022 இல் நடக்ககூடிய விடயங்கள் வருமாறு

புதிய பெருந்தொற்று ஒன்று உருவாகும்.

கொரோனா தொற்றானது ஒரு புதிய வைரஸ் தோன்றி குழப்பத்தை உருவாக்கலாம் என்ற அச்சம் பலரிடத்தில் நிலவுகின்றது.

வங்கா பாபா கணித்த பல விடயங்கள், அவர் 1996இல் உயிரிழந்ததற்குப் பின் பலித்து வருவதாக பலர் நம்புகிறார்கள்.

வங்கா பாபா மீண்டும் ஒரு பெருந்தொற்று உருவாகும் என கணித்துள்ளார்.

அவர், சைபீரியாவில் அது உருவாகும் என்றும், பனியில் உறைந்திருக்கும் ஒரு வைரஸ், பருவநிலை மாற்றம் காரணமாக வெளிப்பட்டு பெருந்தொற்றை உருவாக்கும் என கணித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர்

தற்போது ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ள நிலையில், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என பலரும் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

தீவிரமான பருவ நிலை மாற்றம்

வங்கா பாபா, பருவநிலை மாற்றம் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை நிலநடுக்கங்களும், சுனாமிகளும், பெருவெள்ளங்களும் தாக்கும் என கணித்துள்ளார்.

இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி வரை உயரும்.

அதனால் வெட்டுக்கிளிகள் பயிர்களைத் தாக்குவதால் பஞ்சம் உண்டாகும் என்றும் கணித்துள்ளார்.

அத்துடன், பல நகரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கணித்துள்ளார்.

பணவீக்கம்

உலகம் முழுவதும், பெருந்தொற்று, அரசியல் நிலையின்மை ஆகியவற்றின் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருவதை நம்மில் பலர் அறிவோம்

2022இல் வரி உயர்வுகளும், எரிபொருள் கட்டண உயர்வும் அதே நேரத்தில் குறைவான வருவாயும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலியன்கள் ஆக்கிரமிப்பு

2022இல் ஏலியன்கள் பூமிக்குள் நுழையலாம் என வங்கா பாபா கணித்துள்ளார்.

இந்த விடயமானது பலரிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here