பாட்டியின் வீட்டிற்கு செல்வதை தடுத்த பெற்றோர்… சிறுவனின் முடிவு..!

0

இந்தியாவில் கேரளாவின் கோட்டயம் பாம்பாட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி சரத்-சுனிதா.

இவர்களது 12 வயது மகன் மாதவ் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் பெற்றோரிடம் பாட்டி வீட்டிற்கு செல்ல மாதவ் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மாதவ், சமையலறையில் இருந்து மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், அவனை மீட்டு அருகே உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் 80 சதவீத தீ உடலில் பரவியிருந்ததால் சிகிச்சை பலனின்றி மாதவ் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here