பாடசாலை மினி வான் மீது லொறி மோதி விபத்து! 19 குழந்தைகள் பலி

0

தென்னாப்பிரிக்கா நாட்டின் குவாஸ்லு – நடால் மாகாணத்தில் ஆரம்ப பாடசாலை உள்ளது.

இந்த பாடசாலையில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை குழந்தைகள் பாடசாலை மின் வானில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

மின்வானில் 19 குழந்தைகள், வான் சாரதி, உதவியாளர் என 21 பேர் பயணித்தனர்.

நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பாடசாலை வாகனம் மீது சாலையின் எதிரே வந்த சரக்கு லொறி வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மினிவேனில் பயணம் செய்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here