பாடசாலை நாட்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளில், அடுத்த வாரமும் மூன்று நாட்களுக்கு மாத்திரம் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை அரச விடுமுறை தினமாகும்.

வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களை வழங்குதல் அல்லது இணையவழியில் கற்பித்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியுடன், வெள்ளிக்கிழமை பாடசாலைகளை இயக்கலாம்.

அத்துடன், ஒவ்வொரு ஆசிரியரும், குறைந்தது 3 நாட்களுக்கு பாடசாலைக்கு சமூகமளித்து, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில் நேரசூசியைத் தயாரிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here