பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டிற்கான, முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, 2021ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது,

அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான, நத்தார் பண்டிகைக்காக அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று விடுமுறை வழங்கப்படும்.

குறித்த விடுமுறையின் பின்னர் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2022 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த பரீட்சையை நடத்துவதில் ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு விடுமுறை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் மார்ச் மாதம் 07 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இதுதவிர சித்திரை புத்தாண்டுக்காக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

முஸ்லிம்களுக்கான நோன்பு காலங்களில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 3ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, மே மாதம் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

2021 க.பொ.த க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்வியாண்டு 2022 ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here