பாடசாலை ஆரம்ப தினத்திலேயே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
இதன்படி, பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனினும், ஒக்டோபர் மாதம் 25ம் திகதி பாடசாலைகளுக்கு செல்ல அதிபர் − ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.
பாடசாலை ஆரம்ப தினத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் தொழில்சங்கங்களுக்கு இடையில் இன்று (28) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.