பாடசாலைகள் நாளை முதல் வழமைக்கு- மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஓர் அறிவிப்பு

0

பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை (10) முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக கடந்த சில மாத காலமாகவே, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பகுதி பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பினாலும், பாடசாலைக்குள் உள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான உணவுகளை, இயலுமான வரை வெளியிலிருந்தே கொண்டு வருமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதார பிரிவினரின் அனுமதி கிடைத்தவுடனேயே, பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here