இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து வெளியான செய்தி!

0

தரம் ஒன்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சற்று தாமதமாகி 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை குறிப்பிட்டார்.பாடசாலைகள் 2021 டிசம்பர் 23 அன்று விடுமுறைக்காக மூடப்பட்டு, புதிய கல்வியாண்டிற்கு 2022 ஜனவரி 03 அன்று மீண்டும் திறக்கப்படும்.

விடுபட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால் முதல் தவணை ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 3ஆம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும் நடைபெறவுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here