பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல முக்கிய அறிவிப்பு

0

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பிலான பரிந்துரைகளை எதிர்வரும் கொரோனா ஒழிப்பு விசேட குழுவில் முன்வைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக புத்திஜீவிகள் குழு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்று அவற்றையும் கொவிட் ஒழிப்பு விசேட குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பாடசாலைகளை விரைவில் மீள திறக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்தவுடன், பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன்பின்னர் தரம் 7 முதல் தரம் 13 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here