யாழ். பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஏழு பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால்செய்யப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை(20.09.2021) பிற்பகல் பாசையூர் அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்துப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூன்று மோட்டார்ச் சைக்கிள்களில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இதன்போது வாள் ஒன்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.