பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு

0

பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த விடயத்தில் குறித்த பத்திரிக்கைக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் ஏற்பட்டிருந்தன.

பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் தூதர் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானில் உள்ள அந்த நாட்டு பிரஜைகளுக்கும் எதிராக பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு இடையே வன்முறைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளை உடனடியாக அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் பிரஜைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here