பாகிஸ்தானில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

0

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் சித்திரவதைக்கு உட்படுத்தி, கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட இலங்கையர் தொடர்பான, மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் மேலாளராக பணியில் இணைந்ததுடன், 2012இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொதுமுகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.

தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here