பாகிஸ்தானில் இலங்கையர் கொலை l நூற்றுக்கணக்கானோர் கைது

0

பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையில் கடமையாற்றிய இலங்கையர் ஒருவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, தீக்கிரையாக்கும் சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது.

நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here