பஹாமாஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியச் சிறுவனுக்கு நேர்ந்த கதி

0

பஹாமாஸ் தீவுகளுக்கு எட்டு வயதான Finley Downer, தன் பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் சுற்றுலா சென்றிருந்தான்.

அங்கு சில உயிரினங்களுடன் விளையாடுவதற்காக அனுமதிச்சீட்டு பெற்றிருந்தனர்.

இந்நிலையில், பிள்ளைகள் தண்ணீரில் இறங்கி சுறாக்களுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக சுறாக்கள் Finleyயைத் தாக்க, ஐயோ, காப்பாற்றுங்கள் என சத்தமிட்டிருக்கிறான்

உடனே, அவனது சகோதரியான Lilly கையைப் பிடித்து அவனைத் தண்ணீரிலிருந்து வெளியே தூக்கியிருக்கிறாள்.

உடனே Finley மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

அவனுக்கு கால்களில் பயங்கர காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் nurse sharks என்னும் சுறாக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதவை ஆகும்.

ஆனால், முறையான வழிகாட்டிகள் யாரும் இல்லாமல் தாங்களே சுறாக்களுடன் இறங்கியதாலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அந்த சுறாக்கள் மைய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சுறாக்களுக்கு உணவளிக்கப்படும் நேரத்தில் Finley தண்ணீரில் இறங்கியதால், அவை அவனைத் தாக்கியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here