பஸ் கவிழ்ந்து கோர விபத்து…! 11 பேர் பலி…!

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட வேன் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபர்பாத் நகருக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப் பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

விபத்துக்கு மோசமான சாலைகளும், போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடை பிடிக்காததும், கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதுமே காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here