பஸ் கவிழ்ந்து கோர விபத்து….! பயணிகளுக்கு நேர்ந்த கதி….

0

பாகிஸ்தானில் சுற்றுலா பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் – பால்டிஸ்தான் பகுதியில் இருக்கும் பள்ளத்தில் சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்தனர்.

15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ரஹிமாபாத் பகுதிக்கு அருகே சென்றபோது அதிவேகமாக திரும்பியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here