பழம் பெரும் நடிகை மறைவு

0

திரையுலகில் 65 ஆண்டு காலம் கோலோச்சிய நடிகை ஜெமினி ராஜேஸ்வரி (94) நேற்று காலை காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த இவர், காரைக்குடியில் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, நடனம் மீதான ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க சென்னை வந்தார்.

சந்திரலேகா படத்தில் ஆட ஆரம்பித்த இவர், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடியுள்ளார். காதல்படுத்தும் பாடு படத்தில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து 16 வயதினிலே, சின்னவீடு, நிறம் மாறாத பூக்கள், கன்னிப்பருவத்திலே, எதிர்நீச்சல், கயல், சொக்கத்தங்கம் உட்பட, 60 படங்களில் நடித்துள்ளார். ஏகப்பட்ட மேடை நாடகங்களில் இவர் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here